21/03/2016

இரத்ததானம் பற்றி நீங்கள் அறிந்திடாதவை

🇨🇭💉💪🚑🇨🇭򴒞இரத்ததானம் (Blood donation)  என்பது ... thumbnail 1 summary

🇨🇭💉💪🚑🇨🇭򴒞இரத்ததானம் (Blood donation)  என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.

🎤💐ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது.

🎤💐இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 300 ml இரத்தம் தான்  கொடுக்கிறார்.

🎤💐அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.

🎤💐  3 மாதங்களுக்கு ஒரு முறை எந்த வித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம்.

🎤💐 இரத்த தானம் செய்வதற்கு 15 நிமிடங்கள் போதும்.

🎤💐உடலில் உள்ள ஒவ்வொரு இரத்தஅணுவும்  (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது.

🎤💐இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி.
🎤💐எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.

🎤🔭📡🔊💐🌷👇🏾👌🏾👇🏾👌🏾💪
“இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள் “  

🌷இரத்தப் பிரிவு, 
🌷இரத்தத்தில் மஞ்சள் காமாலை,
🌷மலேரியா, 
🌷பால்வினை நோய்
மற்றும்
🌷எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு இரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

🎤💪இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் மேம்படுவதற்கும் உதவும்.

💐👇🏾இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.

💐தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு (Heart attack) ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.

💐ஹிமோகுளோபின் (Hemoglobin)அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது.

💐இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது.

💐இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.

💐இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது.

🎤🌷💐
இரத்தப் பகுதிப் பொருட்கள் (இரத்தச் சிகப்பணு,
இரத்த வெள்ளையணு,
 இரத்த தட்டுக்கள், 
பிளாஸ்மா) அனைத்தும் தகுந்த வெப்பநிலையில் குறிப்பிட்ட காலம் வரையிலும் பாதுகாக்கப்படுகிறது.

🌷💐இவ்வாறு 1 யூனிட் இரத்தத்தை  நான்கு பாகங்களாக பிரித்து 4 நோயாளிகளுக்கு வழங்கும் போது 4 உயிர்கள் பிழைக்கின்றன.

🌷💐💉
இரத்ததானம் செய்தவர்களின் இரத்தம் பரிசோதனை செய்தபிறகே நோயாளிக்குச் செலுத்தப்படுகின்றது.
💐ஆகவே 🌷

இரத்த தானம் செய்வோம்!
மனித உயிர் காப்போம்.!!

இரத்த தானம் செய்வோம்!
மனித நேயம் காப்போம்.!!.

No comments

Post a Comment