19/02/2016

₹251 ஸ்மார்ட் போனை விடுங்கள். வெறும் ₹68/-க்கு ஐபோன் 5S வாங்கி இருக்கிறான் பஞ்சாபி மாணவன்.

251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இந்திய மக்கள் தத்தளித்து கொண்டு இருக்கும் போது பன்ஜாப்-ஐ சேர்ந்த கல்லூரி மாணவன் ஒரு... thumbnail 1 summary

251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இந்திய மக்கள் தத்தளித்து கொண்டு இருக்கும் போது பன்ஜாப்-ஐ சேர்ந்த கல்லூரி மாணவன் ஒருவன் வெறும் 68 ரூபாய் செலவில் ஐபோன் 5s ஸ்மார்ட் போனே வாங்கி விட்டான்.ஆன்லைன் ஷாப்பிங்-இற்கு பெயர் போன ஒரு தளம் தான் 'ஸ்நாப்டீல்'. இந்த தளத்தில் பன்ஜாபி மாணவன் நிகில் இந்த மாதம் 12 ஆம் திகதி ஐபோன் 5s ஒன்றை ஆர்டர் செய்து இருக்கிறான்.சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் குறிப்பிட்ட ஏதோ ஒரு தவறினால் ஐபோன் 5s-இன் விலை வெறும் 68 ரூபாய் என்று 'ஸ்நாப்டீல்' தளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்திருக்கிறது.இதை அவதானித்த நிகில் அடுத்த நொடியே குறிப்பிட்ட ஐபோனை ஆர்டர் செய்து இருக்கிறான். ஐபோன் வரப்போகிறது என்ற ஆர்வத்தில் இருந்த நிகிலிட்கு ஏமாற்றமே காத்திருந்தது.'ஸ்நாப்டீல்' நிறுவனம் குறிப்பிட்ட ஆர்டர்-ஐ தவறான ஒரு ஆர்டர் என்று கூறி குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு அனுப்ப மறுத்துள்ளது.இதையடுத்து தான் ஆர்டர் செய்த ஸ்மார்ட் போன் டெலிவர் செய்யப்படவில்லை என்று  நிகில் 'ஸ்நாப்டீல்' நிறுவனத்தின் மீது பஞ்சாப் சங்க்ரூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்து உள்ளான்.வழக்கு நிகில்-க்கு சார்பாக முடிவடைய ஐபோனுடன் சேர்த்து நிகிலிட்கு 2000 ரூபாய் பணத்தையும் டெலிவர் செய்ய வேண்டும் என்று ஸ்நாப்டீல் நிறுவனத்திற்கு  நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து ஐபோன் மற்றும் 2000 ரூபாய் பணத்தை நிகிலிட்கு வழங்கியது ஸ்நாப்டீல் நிறுவனம்.அதை தொடர்ந்து மறுபடியும் ஸ்நாப் டீல் நிறுவனம் இந்த விற்பனை செல்லுபடியானது இல்லை என்று வழக்கு தாக்கல் செய்ய மறுபடியும் வழக்கானது நிகில்-இற்கு சார்பாகவே முடிவடைய ஸ்நாப் டீல் நிறுவனம் இந்த வழக்கை முடிக்க 10000 ரூபாய் பணத்தை செலவழிக்க நேரிட்டு இருக்கிறது.குறிப்பிட்ட இந்த விடயத்தை ஸ்நாப்டீல் நிறுவனம் மூடி மறைத்தாலும் இந்த தகவல் இந்தியா டைம்ஸ் தளத்தில் பதிவேற்றப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments

Post a Comment